Enable Javscript for better performance
நிதி நிறுவனத்தில் கொள்ளை: 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோவிலில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில்  தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் தேதி இந்த நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கத்தி முனையில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

     இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.   இதில், மேற்கண்ட நிதி நிறுவனத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன் என்பவரது தலைமையில், கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் நாகராஜன், புதுத்துறையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன், வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த வினோத், சேந்தங்குடியை சேர்ந்த சந்தானம் மகன் ஜெகன், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் கமலக்கண்ணன் ஆகிய 6 பேரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.  இதையடுத்து, சேத்தியாதோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் 6 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai