சுடச்சுட

  

  அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கம் சார்பில், தேசிய நுகர்வோர் தினவிழா மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஜி.வி.சத்தியநாராயணன், பொருளர் ஆர்.பக்கிரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொது செயலர் ஏ.காமராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினார்.

  கூட்டத்தில், பண்ருட்டியில் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கக் கோரி விழிப்புணர்வு பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாவட்டச் செயலர் இ.பழனிவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai