Enable Javscript for better performance
பங்குனி உத்திர திருவிழாவில் நாட்டிய வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் துறைமுகம் காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு ராஜமாதங்கி நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் ராம.முத்துக்குமரனார் தலைமையில் நடைபெற்றது. திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்று நாட்டியம் மூலமாக வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்றவர்களுக்கு காமாட்சி அம்மன் இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அறங்காவலர் சீ.வைத்தியநாதன், என்.எஸ்.நாகராஜசிவம் சிவாச்சாரியார், ஆசிரியை கே.எஸ்.ஆரியா, நிர்வாகி சசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai