Enable Javscript for better performance
பல்கலையில். உதவிப் பேராசிரியர்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிமாறுதல் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், வியாழக்கிழமை துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, இங்கு பணியாற்றி வந்தவர்களில் 369 உதவிப் பேராசிரியர்களை மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். இவர்களில் 366 பேர் மாற்று இடத்தில் பணியில் சேர்ந்ததாகத் தெரிகிறது.இந்த நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்ட 366 உதவிப் பேராசிரியர்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பணிநிரவலில் சென்ற பேராசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்,  சி.பி.எஸ். கணக்கை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமாற்றம் செய்யப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகத்தை சந்தித்து மனு அளித்தனர். பின்பு, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் உதவிப் பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகத் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai