சுடச்சுட

  

  பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

  By கடலூர்  |   Published on : 25th March 2016 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

  தமிழக அரசின் 5 ஆண்டு கால சாதனை விளக்கம் மற்றும் தேர்தல் பிரசார தெருமுனைக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன், மீனவரணிச் செயலர் கே.தங்கமணி, தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   கூட்டத்தில், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அதிமுகவுக்கு மக்கள் மன்றம் தரப்போகிறது. ஒருவர் பழம் நழுவி பாலில் விழும் என்றார். ஆனால், அவரது நினைப்பு பொய்த்துவிட்டது. 40 ஆண்டுகள் அரசியலில் உள்ள வைகோ, விஜயகாந்த் தலைமையை ஏற்றுள்ளார்.   கடலூர் தொகுதியில் 2001, 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தோம்.

  ஆனால், தற்போது நகருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதால் தைரியமாக மக்களை சந்தித்து வாக்கு கேட்போம் என்றார்.

   இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசினர்.

   இந்தக் கூட்டங்களில் ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி, விவசாய அணிச் செயலர் கே.காசிநாதன், மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, நிர்வாகி த.ரவிச்சந்திரன், கவுன்சிலர் வ.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai