சுடச்சுட

  

  கடலூரில் மக்கள் நலக் கூட்டணியினர் வாக்கு சேகரிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

  கடலூர் பேருந்து நிலையம், லாரன்ஸ் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் மக்களிடம் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வழங்கி வாக்குகள் சேகரித்தனர்.

  நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம், நகர செயலர் கோ.ப.ராமசாமி, தேமுதிக ஒன்றியச் செயலர் ஜி.ராயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகரச் செயலர் வி.சுப்புராயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விஜயகாந்த் புகைப்படம் இல்லை:  பிரசாரத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில்  விஜயகாந்த்தின் புகைப்படம் இல்லை. இதுகுறித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்ட மறுநாளே அவரது புகைப்படமும், தேமுதிக பெயரும் இல்லாமல் வாக்கு சேகரிப்பதை ஏற்க முடியாது. இது ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் எப்படி ஏற்க முடியும் என்றார்.

  இதுகுறித்து கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டு விட்டது. அதனால், ஏற்கெனவே அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கினோம். இதில் தேமுதிக புறக்கணிப்பு ஏதும் இல்லை என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai