சுடச்சுட

  

  சிதம்பரத்தில் பல்கலைக்கழக மாணவர்  தற்கொலை செய்துகொண்டார்.

  சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை நாகவள்ளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் சதீஷ்குமார் (20). இவர் அண்ணாமலைநகர் திருவக்குள்ளம் பகுதியில் வசிக்கும் தனது அத்தை வசந்தா என்பவரது வீட்டில் தங்கியிருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தார்.  

  இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சதீஷ்குமார் இறந்து கிடந்தார்.

  இதுகுறித்து அவரது அண்ணன் சந்தோஷ்குமார் கொடுத்தப் புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai