Enable Javscript for better performance
முத்தையாசுவாமி கோயில் பங்குனி உத்திர விழா- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே பெருமுளை முத்தையாசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் 10ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை ராயப்பர், முத்தையா, பூமாலையப்பர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா சென்றனர். அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றனர்.

     ராயப்பர் சுவாமி ஆடல் பாடலுடன் அனைத்து தெருக்களிலும் வீடுவீடாக கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடந்தது. அப்போது பக்தர்கள் கருப்பு துணியை சாமிக்கு அர்ப்பணித்தனர். மேலும், பானங்களையும் படையலிட்டு பிரார்த்தனை செய்தனர்.

     வியாழக்கிழமை 11ஆம் நாள் விழாவில், அன்று காலை ராயப்பர் சுவாமி சிவப்புக் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டு, ஊர் எல்லையில் உள்ள எல்லை எதுபதியம் கோயிலை அடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் உணவு சமைத்தும், மாவிளக்கு, பழம், தேங்காய் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

     எல்லை கோயிலில் ராயப்பருக்கு ஆட்டுக்கிடா வெட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராயப்பர் ஆடல்பாடலுடன் முத்தையாசாமி கோயிலுக்கு திரும்பி வரும் வழியில் குடிசாமி பக்தர்கள் ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு நேர்ச்சை செலுத்தினர்.

    அப்போது, குழந்தைப்பேறு, திருமண பாக்கியம் பெறவும், பில்லி சூனியம் நீங்கல் வேண்டியும் திரளான பெண்கள் ஈரஆடைகளுடன் கீழே படுத்து பிரார்த்தனை செய்தனர்.

     விழாவில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai