சுடச்சுட

  

  நெய்வேலி அருகே முன்விரோத மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

  நெய்வேலி, வட்டம் 19இல் வசிக்கும் கனகவேல் மகன் கிருஷ்ணன்(21). இவருக்கும், வட்டம் 30, மாந்தோப்பு தெருவைச் சேர்ந்த தர்மா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கிருஷ்ணன் தனது நண்பர்களான கதிரவன் (21), ராஜ்குமார் (21) ஆகியோருடன் கொள்ளிருப்பு-நைனார்குப்பம் இடையே உள்ள முந்திரி தோப்பில் பேசிக்கொண்டு இருந்தாராம்.

  அப்போது அங்கு வந்த தர்மா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம். இதில், கிருஷ்ணன், கதிரவன், ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

   இதுகுறித்து கிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில் மேலகுப்பத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகுமாரை கைதுசெய்த தெர்மல் போலீஸார், தலைமறைவாக உள்ள தர்மா, சின்னகாப்பான்குளத்தைச் சேர்ந்த விக்கி, மணிகண்டன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai