Enable Javscript for better performance
லாரி ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    லாரி ஓட்டுநர்களும் தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    தேர்தலை முன்னிட்டு அவர் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றிருந்த ஆட்சியர் அங்கிருந்த தேர்தல் பிரிவு, சர்வே பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து புகார்களும் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்தளம் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு வாக்காளர்களும் அவசியமும், தேவையும் ஏற்பட்டால் விசாரணையின் அடிப்படையில் தபால் வாக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து வாக்குச்சாவடிகளும் இணையம் மூலமாக இணைக்கப்பட்டு, அனைத்து செயல்பாடுகளும் புதுதில்லியில் உள்ள தேர்தல் ஆணையம், சென்னை தலைமை அலுவலகம் ஆகியவற்றால் கண்காணிக்கபடும்.

     வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 27 பறக்கும் படைகள், 27 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

     இந்த கண்காணிப்பு படைகளின் வாகனங்களிலும் உரிய கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் உன்னிப்பாக கண்காணிக்கபடும். கல்லூரி மாணவர்கள் பட்டியல் தயார் செய்து அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால் சேர்க்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த மாணவர் பட்டியலை உறுதி செய்து முழுமையான வாக்குப் பதிவுக்கு கல்லூரி மாணவ தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றார் அவர்.

     ஆய்வின்போது திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.ஜவகர், விருத்தாசலம் கோட்டாட்சியர் பி.எம்.செந்தில்குமார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai