சுடச்சுட

    

    அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மரியாதை

    By சிதம்பரம்  |   Published on : 26th March 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டணி முடிவானதையொட்டி சிதம்பரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு தேமுதிகவினர் மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர் மாலை அணிவித்தனர்.

    சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே உள்ள பெரியார் சிலைக்கும் கூட்டணியினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலர் சபா.சசிக்குமார், மதிமுக மாவட்டச் செயலர் ஏ.என்.குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பால.அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

     நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் ஆர்.பாலு, நகரச் செயலர் சி.க.விஜயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செல்வமணி, பெரு.திருவரசு, மதிமுக மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், க.திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலர் வாஞ்சிநாதன், வி.என்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai