சுடச்சுட

  

  சிதம்பரம் பகுதியில் தடையை மீறி கடந்த 6 மாத காலமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

  தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாட்டரி சீட்டு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸார் கெடுபிடியால் தற்போது லாட்டரி சீட்டாக வழங்காமல் நம்பர் போட்டு பில் வழங்கப்பட்டு, கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பணத்தை கொடுத்து சீட்டு வாங்கி ஏமாறும் நிலை உள்ளது.

   கேரளா மாநில லாட்டரி சீட்டின் விலை ரூ.2 (மொத்தம் 6 நம்பர்கள்), ஒரு சேம் நம்பர்களின் விலை ரூ.100, முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.3500 மற்றும் ரூ.ஆயிரம், 500, 100, 50 என நிறைய பரிசுகள் உள்ளன.  இந்த லாட்டரியில் ஒரே நம்பர் கொண்ட 50 சேம் நம்பர்  எடுத்தால், அந்த நம்பருக்கு குலுக்கலில் விழுந்துவிட்டால் 50 ல ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. கள்ளத்தனமாக விற்கப்படும் இந்த லாட்டரி சீட்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே, லாட்டரி சீட்டு விற்பனையை காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai