சுடச்சுட

  

  தமிழகத்தை ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே வேண்டும்: சீமான்

  By கடலூர்  |   Published on : 26th March 2016 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தை ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

  நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வெள்ளிக்கிழமை கடலூரில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்கள் தங்களது உடைமைகளையும், உரிமைகளையும் பன்னெடுங்காலமாக திராவிடக் கட்சிகளிடம் பறிகொடுத்து வருகிறார்கள்.

  அதனை மீட்கவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.  இத்தேர்தல் அடிமை தேசிய இனத்தின் உரிமை மீட்சிப் போர். ஒரு இனத்தை அரசியல், பொருளாதாரம், அதிகாரம் ஆகியவற்றின் மூலமாக மற்றொரு இனம் கட்டுப்படுத்தினால் அதிலிருந்து எப்போதும் மீள முடியாது.

  தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது.  ஆனால், ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே வேண்டும். தமிழருக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளவே தனித்துப் போட்டியிடுகிறோம். 

  திராவிடம் என்பது தமிழருக்கு ஏற்றதல்ல. அது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. எந்தவொரு தத்துவமும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற தத்துவத்தின் கீழ் திராவிட இயக்கமும் அழியும். ஆட்சி மாற்றம் என்பதல்லாமல், ஆட்சி முறையிலும் மாற்றம் கொண்டுவந்து புதிய தேசியத்தை நாம் தமிழர் கட்சி படைக்கும்.

  மதுவின் கொடுமை குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது.  ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே தேசிய எழுச்சியாகக் கருதப்படும். அந்த அடிப்படையில் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக நாம் தமிழர் கட்சி போராடும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai