சுடச்சுட

    

    பண்ருட்டி ஒன்றிய திமுக சார்பில் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் மருங்கூர் மற்றும் வீரசிங்கன்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஒன்றிய அவைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஜெனார்த்தனன், ஞானசேகர் ஆகியோர் வரவேற்றனர். மாவட்டப் பிரதிநிதிகள் ஞானமணி, ஆடலரசன், ஒன்றிய துணைச் செயலர் செல்வகுமார், பொருளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பண்ருட்டி தெற்கு ஒன்றியச் செயலர் சபா.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

    பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், காடாம்புலியூர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai