சுடச்சுட

  

  பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  பள்ளித் தாளாளர் சு.குருநாதன் தலைமை வகித்தார். மா.வெண்ணிலா அற்புதவேல்ராஜா, இ.பிரியா ஆனந்தவேல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் குரு.அற்புதவேல்ராஜா வரவேற்றார்.

  கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கே.பிச்சையப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் க.முத்துராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பேசினர்.

   என்எல்சி இளநிலை பொறியாளர் ஆர்.அசோக்குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில முன்னாள் பொதுச் செயலர் இ.தமிழறியும் பெருமாள், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் புலவர் ரா.சஞ்சீவிராயர், புலவர் ரத்தின ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மை விருந்தினர்கள் பரிசு வழங்கினர். இயக்குநர் குரு.சிவபாலகி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai