சுடச்சுட

    

    நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்மேடு, ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாமகவினர் அண்மையில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.

    பண்ருட்டி ஒன்றிய முன்னாள் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இளைஞரணிச் செயலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வடகுத்து ஊராட்சி மன்றத் தலைவர் கோ.ஜெகன் பங்கேற்று, துண்டுப் பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கினார்.

    மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் அஸ்வத்தாமன், பண்ருட்டி ஒன்றிய இளைஞரணிச் செயலர் கோகுல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai