சுடச்சுட

  

  கடலூரில் தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை சீமான் தொடங்கினார்.

  கடலூரில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் தொகுதியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

  மேலும், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

   இதனைத் தொடர்ந்து சீமான் தனது தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். கடலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் கடலூர் முதுநகரில் சஞ்சீவிராயன் கோயில் தெரு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

   அப்போது, கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன்.

  கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி அருவாமூக்கு முனை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

  புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நான் இருக்க வேண்டும் என்பதால் தான் கடலூர் தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுகிறேன் என்றார்.

  தொடர்ந்து சனிக்கிழமை (மார்ச் 26) மீன்பிடி துறைமுகம், உழவர்சந்தை, மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர், வணிகர்கள் சந்திப்புக் கூட்டம், மாலையில் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். மேலும், மார்ச் 27ஆம் தேதியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

   முதற்கட்டமாக 3 நாள்கள் பிரசாரத்துக்கு திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட பிரசாரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்தார்.

   மற்ற கட்சியினர் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் கடலூரில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai