Enable Javscript for better performance
பெண்களிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி, வடலூர் பகுதியில்  வெவ்வேறு சம்பவங்களில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பெண்களிடம் நகை பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    நெய்வேலி, வட்டம் 6இல் வசிப்பவர் சாந்தலிங்கம். இவரது மனைவி சேர்மராணி (46), மந்தாரக்குப்பத்தில் உள்ள வங்கியில் காசாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த

    புதன்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் முகவரி கேட்பதுபோல் விசாரித்துள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் சேர்மராணி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டாராம்.

    இதையடுத்து 3 பேரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, சேர்மராணி அளித்தப் புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்: குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கிருஷ்ணவேணி (41). விருத்தாசலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு தனது கணவர் விஜயகுமாருடன் பைக்கில் வடலூருக்கு புறப்பட்டார்.

    வடலூர் அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 இளைஞர்கள் தம்பதியினரை கீழே தள்ளிவிட்டனராம். பின்னர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்தப் புகாரின் பேரில் வடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai