சுடச்சுட

    

    மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...

    By கடலூர்  |   Published on : 26th March 2016 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில் அவர்களுடைய ஆதார் எண்ணை, ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும். இதன் மூலமாக டிஜிட்டல் லைப் சான்றினை இணையதளத்தின் மூலம் எளிய முறையில் சமர்ப்பித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறையில், அனைத்து நேரத்திலும் உயிர் சான்றினை (L‌i‌f‌e​ C‌e‌r‌t‌i‌f‌i​c​a‌t‌e) இணையதளத்தின் மூலமாக, வங்கிக் கிளைக்குச் செல்லாமலே அளித்திடலாம். இதனால், வங்கிக் கிளைக்கு உயிர் சான்றினை அளித்திட வருடா வருடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

     எனவே, அனைத்து மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர், தங்களது ஆதார் எண்ணை ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கில் தாமாக முன்வந்து திங்கள்கிழமைக்குள் முன்பதிவு செய்து பயன்பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai