சுடச்சுட

    

    வாகன நிறுத்துமிடமாக மாறிய பயணிகள் நிழற்குடை

    By சிதம்பரம்  |   Published on : 26th March 2016 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்தில் பயணியர் நிழற்குடையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.

    சிதம்பரம் மேலவீதி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் எம்பி ஏ.பொன்னுசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகளின் வசதிக்காக பெரிய நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது நிழற்குடையின் பின்புறம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதையடுத்து தொடர் போராட்டங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபானக் கடை அங்கிருந்து அகற்றப்பட்டது.

     பயணியர் நிழற்குடையின் அருகே தனியார் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு வரும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் தங்களது வாகனங்களை பயணிகள் நிழற்குடையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் பேருந்துக்காக வரும் பயணிகள், நிழற்குடையில் நிற்க இடமின்றி வெயிலில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

     மேலும், நிழற்குடைக்குள் பழ வண்டிகளும் நிறுத்தப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. எனவே, நிழற்குடையை பயணிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai