Enable Javscript for better performance
வாக்காளர் சேவை மையங்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி, புவனகிரி வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வாக்காளர் சேவை மையங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. பறக்கும் படை, நிலைக் குழுவினர் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பறக்கும் மற்றும் நிலை குழுக்களின் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தேர்தலில் இணையதளம் வழியாகவும் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்களும், கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் இதுவரையில் பறக்கும் படையினரால் ரூ.8,69,500 பறிமுதல் செய்யப்பட்டதில், உரிய ஆவணம் கொடுக்கப்பட்டதால் ரூ.6,75,500 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மதுபாட்டில்கள், ஆயிரம் துணிகள், 200 கிலோ அரிசி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் 505 வழக்குகள், 93 தேர்தல் நடத்தை விதிமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,335 சுவர் விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.  ஆய்வின்போது வட்டாட்சியர்கள் அந்தோணி ராஜ் (குறிஞ்சிப்பாடி), நாசிர் இக்பால் (புவனகிரி) ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai