சுடச்சுட

  

  திட்டக்குடி (தனி) தொகுதியில் அரசு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  திட்டக்குடி பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு விருத்தாசலம் கோட்டாட்சியர் பி.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். “வாக்களிக்க நீங்கள் தயாரா?‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை வெற்றி கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

   18 வயது நிறைவடைந்தவர்கள் கண்டிப்பாக வாக்காளராக பதிவு செய்ய வேண்டும், எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு, மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எடுத்துரைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

   நிகழ்ச்சியில் திட்டக்குடி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன், முதன்மை உதவியாளர்கள் லட்சுமணன், சதாசிவம், சுதாகர், மண்டல துணை வட்டாட்சியர் செல்வமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai