சுடச்சுட

  

  வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் பொருள்கள் அனுப்பிவைப்பு

  By கடலூர்  |   Published on : 26th March 2016 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருள்கள் வெள்ளிக்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான பொருள்கள், வாக்குச் சாவடிக்குச் செல்லும் வகையில் வாகன வசதி, பாதுகாப்பு ஏற்பாடு, பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் மாவட்ட தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

   இதன்படி, வாக்குப் பதிவு அன்று தேவைப்படும் பொருள்கள் பட்டியலிடப்பட்டன. அதில், குண்டூசி முதல் வாக்குப்பதிவு இயந்திரம் வரை சுமார் 120 பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பொருள்கள் தேவையான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

  இவற்றில் 51 வகையானப் பொருள்களை ஒவ்வொரு தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இதில், நூல், பிளேடு, கார்பன், குண்டூசி, நுழைவு அனுமதிச் சீட்டு, காடாதுணி, வெள்ளைக் காகிதம், பேனா, ஸ்கேல், பென்சில், பசை, பிளாஸ்டிக் கப், தேர்தல் கணக்கு செலவு கண்காணிப்பு அறிவுரை தொகுப்பு, வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்படும் படிவங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

   வாக்காளரின் விரலில் வைக்கப்படும் மை, வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் வைக்க பயன்படுத்தப்படும் சீல், முத்திரை ஆகியவை கடைசி கட்டமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai