Enable Javscript for better performance
வாக்குப் பதிவு இயந்திரம் கையாளும் முறை: அலுவலர்களுக்கு செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப் பதிவு இயந்திரம் கையாளும் முறை: அலுவலர்களுக்கு செயல் விளக்கம்

    By கடலூர்  |   Published on : 26th March 2016 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை  செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தை கையாளும் முறை, தேர்தல் முடிந்த பின்னர் எவ்வாறு சீல் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்வது என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான செயல் விளக்கக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமை வகித்தார். தேர்தல் சட்டம், ஒழுங்கு பணிகள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவா செயல் விளக்கம் அளித்தார். மேலும், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபிஏடி இயந்திரம் பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளித்தார்.

     பயிற்சியில், கோட்டாட்சியர்கள் என்.உமாமகேஸ்வரி, பி.எம்.செந்தில்குமார், பி.எஸ்.விஜியலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai