சுடச்சுட

  

  மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட மேளா அஞ்சலகங்களில் மார்ச் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

  இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் அனைத்து மக்களும் சேர்ந்து பயனடையும் வகையில் சிறப்பு (அடவ) மேளா மார்ச் 28, 29ஆம் தேதிகளில் அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது.

  இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்கள், குறிப்பாக எந்த ஒரு ஓய்வூதியத் தொகை பெறாமல் இருப்பவர்கள் விரும்பிய ஓய்வூதிய தொகைப் பெறும் திட்டமாகும்.

  இத்திட்டத்தின் கீழ் 60 வயதான சந்தாதாரர்கள் மாதாந்திர பங்களிப்புத் தொகையைப் பொறுத்து உத்தரவாதமான ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பெறலாம். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு சந்தாதாரரின் வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். சந்தாதாரர் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

  தனது செல்லிடப்பேசி எண்ணை இத்திட்டத்தில் சேரும் போது அளிக்க வேண்டும். மார்ச் 31ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் சேரும் சந்தாதாரர்களுக்கு அரசின் இணை பங்களிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்கும். பிற சட்டப்பூர்வ சமூக பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு இது பொருந்தாது.

   அனைத்து மாதத் தவணை பங்களிப்பு சந்தாதாரர்கள் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதந்தோறும் பணம் எடுக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai