சுடச்சுட

  

  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், குமரன் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் உரிமை குறித்து விழிப்புணர்வு, வீடு மற்றும் கடைகளுக்கு சென்று பொதுமக்களிடம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

  இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சிசுந்தரம்,ஒன்றிய பொறியாளர் கண்ணன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai