சுடச்சுட

    

    டிவி பார்த்ததை பெற்றோர் கண்டிப்பு: 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

    By dn  |   Published on : 27th March 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

    கடலூர் முதுநகர் மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் பாபு என்ற ஜாகீர்உசேன் மகள் ஷர்மிளா(13). அதேப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்ததாகத் தெரிகிறது. இதனை அவரது தாயார் ஷரியா(40) கண்டித்துள்ளார். விரைவில் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கக் கூடாது என்றும், படிக்க வேண்டும் என்று கண்டித்ததாகத் தெரிகிறது.

    இதனால் வேதனையடைந்த ஷர்மிளா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவினால் தூக்கிட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட வலியினால் சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஷரியா கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai