Enable Javscript for better performance
திமுக வெற்றிக்கு பாடுபட அனைத்து மக்கள் விடுதலை கட்சி முடிவு- Dinamani

சுடச்சுட

    

    திமுக வெற்றிக்கு பாடுபட அனைத்து மக்கள் விடுதலை கட்சி முடிவு

    By dn  |   Published on : 27th March 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜகீர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொது செயலர் ஸ்டாலின், மாவட்ட துணை தலைவர் சண்முகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரமணி ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது, மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது. என்எல்சி நிறுவனம் பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவினை உடன் நிறுத்த வேண்டும். கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சுரேஷ்குமார் அதிமுகவினருக்கு சாதகமாக செயல்படுகிறார். எனவே தேர்தல் அதிகாரியை இடமாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாவட்டச் செயலர் ஜேம்ஸ்ஆரோக்கியதாஸ் வரவேற்க, ஒன்றிய தலைவர் இளையராஜா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai