சுடச்சுட

  

  நகைக்கடை, அடகுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டுமென காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

  கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியிலுள்ள நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பாதிரிபுலியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு காவல் துணைக்கண்காணிப்பாளர் க.நரசிம்மன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சரவணன், ஜெய.வெற்றிசெல்வன், குமாரபாலன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் துணைக் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது குற்றச்செயல்களில்

  ஈடுபடுபவர்கள் மாணவர்களும், புதியவர்களும் அதிகமாக உள்ளனர். இதனால், குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் சிரமம் உள்ளது. இதனை மாற்றிடும் வகையில நவீன யுக்திகளை கையாள வேண்டியுள்ளது. நகைக்கடை, அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இது அனைவருக்கும் பயன்தரக் கூடியதாக இருக்கும்.

   கடைகளில் கண்டிப்பாக அலாரம் பொருத்துதல், சுழற்றி முறையில் பாதுகாவலர்கள் நியமனம், கடைகளில் வேலைப்பார்ப்பவர்கள் குறித்த முழுமையான விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் போன்றவை அவசியமாகிறது.

  அடகுக்கடையில் நகை அடகு வைப்பவர்கள், பெரிய அளவில் நகை வாங்குவோர் குறித்த சந்தேகம் ஏற்படின் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். புதியதாக நகை அடகு வைப்பவரின் புகைப்படம் மற்றும் அவர்களின் முழு விபரத்தினையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். அதிக நகை மற்றும் தொகைகளை வட்டிக்கடை, நிதிநிறுவனங்களில் பெட்டக சேமிப்பில் வைக்க வேண்டாம். கடைகளிலுள்ள பெட்டகம், கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை சரிபார்த்து உறுதியானவையாக மாற்ற வேண்டும். சிறிய, சிறிய விஷயங்களிலும் நகைக்கடை உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட்டு இழப்புகளை தவிர்க்கலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai