Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

    By dn  |   Published on : 27th March 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

    நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை எட்டிட தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு பிரசாரம், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட இளம் வாக்காளர்களிடம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வாக்காளராக பெயரை பதிவு செய்தல், புதிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்குதல் ஆகியபணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்படி திருநங்கைகளை வாக்காளர்களாக பதிவு செய்திடும் சிறப்பு முகாம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் 202 பேர் திருநங்கைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் 71 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். எனவே, அவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட மாவட்டம் முழுவதும் இந்த முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

    கடலூரில் நடைபெற்ற முகாமில் 19 பேர் தங்களது பெயரை சேர்த்துக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கோண்டூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் புதிய திருநங்கைகள் வாக்காளர்களுக்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்வுகளில் சமூக நலத்துறை அலுவலர் சி.மீனா, வட்டாட்சியர் அர.அன்பழகன், தேர்தல் வட்டாட்சியர் ப.ரவி, சமூகநலத்துறை கண்காணிப்பாளர் ஆர்.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai