சுடச்சுட

    

    பண்ருட்டி வட்டம் கொங்கராயநல்லூரைச் சேர்ந்தவர் சு.கணபதி(70). இவருக்கு மனைவி 4 மகன்கள் உள்ளனர். மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த கணபதிக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் விஷ விதைகளை அரைத்து தின்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி க.புஷ்பா(60) கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai