Enable Javscript for better performance
இடம் பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இடம் பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்

    By நெய்வேலி  |   Published on : 28th March 2016 06:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் வழங்கிவிட்டு, மாற்றிடம் சென்றவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் அம்பேத்கர் என்எல்சி உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட சில பகுதிகள், என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டன. அங்கு வசித்த மக்களில் பெரும்பாலோர் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள ஏ-பிளாக் மாற்றுக்குடியிருப்பு மையத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

    கெங்கைகொண்டான் பேரூராட்சி, புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி என்பதாலும், அவர்கள் தற்போது வசித்து வரும் பகுதி நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் இருப்பதாலும், வருகிற தேர்தலில் அவர்கள் நெய்வேலியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாம்.

     இதற்கான சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, வருவாய் கோட்டாட்சியர்கள் சிதம்பரம் விஜயலட்சுமி, கடலூர் உமாமகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் என்எல்சி கல்வித்துறை செயலர் நெடுமாறன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் புவனகிரி தங்கவேல், நெய்வேலி தினேஷ், வட்டாட்சியர்கள் அந்தோணிராஜ், நசீர்இக்பால், உதயகுமார், கீதா, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை 26ஆவது வட்டத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய வாக்குச்சாவடி அலுவலகம் மூலம் செய்து கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai