சுடச்சுட

  

  சிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டர் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை மற்றும் வின்சாஃப்ட் கணினி நிறுவனம் இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கணினிப் பயிற்சி தொடக்க விழா பள்ளிப்படை ரோட்டரி சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அன்பழகன் வரவேற்றார். சபாநாயகம் நினைவு அறக்கட்டளைத் தலைவர் என்.நடனசபாபதி தலைமை வகித்துப் பேசினார்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவர் வி.சீனுவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.அருள்மொழிச்செல்வன், அறக்கட்டளை செயலர் ராஜேந்திரன் மனோஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

   வின்சாஃப்ட் கணினி நிறுவன நிறுவனர் நிர்மலா பயிற்சி குறித்து விளக்கவுரையாற்றினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் வி.சிவப்பிரகாசம், நாராயணன், உறுப்பினர்கள் என்.என்.பாபு, தீபக்குமார், ராஜசேகரன், டி.டி.கே.பாண்டியன், அஷ்ரப்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் வி.சக்திவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai