சுடச்சுட

    

    ஒலிபெருக்கி கட்டியதில் விதிமீறல்: ஒருவர் மீது வழக்கு

    By கடலூர்  |   Published on : 28th March 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுஇடத்தில் ஒலிபெருக்கி கட்டியது தொடர்பாக போலீஸார் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    கடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தூக்கணாம்பாக்கத்தில் சனிக்கிழமை மாலை பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார்.

    இந்தக் கூட்டத்துக்காக அமைக்கப்பட்ட கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியானது, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்ததாம்.

     இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் சிசிலி கொடுத்த புகாரின் பேரில், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒலிபெருக்கி அமைப்பு உரிமையாளர் வெ.வேலு (40) என்பவர் மீது தூக்கணாம்பாக்கம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai