கண்தானம்
By சிதம்பரம் | Published on : 28th March 2016 06:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வண்ணாரப்பாளையம் அப்பாசாமி தெருவைச் சேர்ந்த சித்த மருத்துவரும், மனவளக்கலை மன்ற பேராசிரியருமான அம்பலவாணன் (86) சனிக்கிழமை காலமானார்.
இவரது கண்களை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் கண்கள் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், கதிரவன், விஜயராகவன், பொற்செல்வி ஆகியோர் செய்தனர்.