சுடச்சுட

  

  கௌரவக் கொலைகளை தடுக்க லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தல்

  By சிதம்பரம்  |   Published on : 28th March 2016 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லோக் ஜனசக்தி கட்சியின் கடலூர் மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் ஏ.சிவமணி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஆர்.ராஜேந்திரன், நகரத் தலைவர் கே.மோகனசுந்தர், ஆர்.மோகன், பி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ஆர்.பன்னீர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

  மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மாரியப்பன், ஜி.கஜேந்திரன், எம்.சரளா, டி.மகேந்திரன், எஸ்.ராஜேந்திரன், சிதம்பரம், ஆர்.கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர பொதுச் செயலர் வீரகிருஷ்ணன் நன்றி கூறினார்.

   2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது, தலித்துகள் மீதான வன்கொடுமைகள், கௌரவக் கொலைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai