சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே  சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை மளிகைப் பொருள்கள் கொட்டிக் கிடந்தன.

  கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி பண்ணை வளாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் செயல்பட்டு வருகிறது. கடலூர்-புதுச்சேரி சாலையிலுள்ள இந்த அலுவலகத்தின் எதிர்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரமாக கோதுமை மாவு, ரவா, உப்பு, பருப்பு வகைகள் ஆகியவை கொண்ட பாக்கெட்டுகள் ஏராளமாகக் கொட்டிக்கிடந்தன.

  இந்தப் பொருள்களை சோதனையிட்ட போது அவை பயன்பாட்டுத் தேதி முடிவுற்றவைகளாக இருந்தது தெரிய வந்தது. ஆனால் இப்பொருள்களை கொட்டிச் சென்றது யார் என்ற விவரம் தெரியவில்லை.

  மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

  அவைகளில் பெரும்பாலானவை ஆட்சியரகம் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட  மக்களுக்கு வழங்கப்பட்டன.

  இதில், சில பொருள்கள் ஆட்சியரகத்தில் இருப்பு  வைக்கப்பட்டதாகவும், அவைகள் தற்போது வெளியே கொட்டப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.

  ஆனால், இத்தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் மறுத்து விட்டது. வெள்ள நிவாரணப் பொருள்கள் உடனடியாக அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. ஆட்சியரகத்தில் எந்த பொருளும் இருப்பு வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையோரம் கிடந்த மளிகைப் பொருள்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai