சுடச்சுட

  

  சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பை திரும்பப் பெற ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 28th March 2016 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேமிப்புகளுக்கான வட்டிக் குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் வட்ட செயற்குழுக் கூட்டம், வட்டத் தலைவர் அரங்க.ராமானுஜம் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. செயலர் சி.குழந்தைவேலு வேலை அறிக்கையும், மாவட்டத் தலைவர் டி.புருஷோத்தமன் சிறப்புரையும் ஆற்றினர்.

  கூட்டத்தில், 2ஆவது வட்ட மாநாட்டினை கடலூரில் ஏப்.23இல் நடத்துவது. மத்திய அரசு சிறுசேமிப்பு, மூத்த குடிமகன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வெளியிட்ட ஆணையை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதம் அகவிலைப்படி உயர்த்தியதைப் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்த வேண்டும்.

  ஏப்ரல் மாதம் நடைபெறும் ஓய்வூதியர்களுக்கான வருடாந்திர நேர்காணலில் நடப்பாண்டில் டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட உள்ளதால் அதுகுறித்த செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.

  ஆதார் எண் பெறுவதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு கருவூலத்திலேயே ஆதார் எண் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மனோகரன், வி.சுந்தரராஜன், கோ.ஆதவன், வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai