Enable Javscript for better performance
டிராக்டர் மோதி சிறுவன் சாவு: கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    டிராக்டர் மோதி சிறுவன் சாவு: கிராம மக்கள் சாலை மறியல்

    By சிதம்பரம்  |   Published on : 28th March 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே டிராக்டர் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

    சிதம்பரம் அருகே உள்ள ம.அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா மகன் பரணிதரன் (8). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    சனிக்கிழமை இரவு பரணிதரன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இந்த நிலையில், மணல் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரைக் கைதுசெய்ய வேண்டும், அப்பகுதி வழியாக இரவில் முகப்பு விளக்கு போடாமல் லாரி மற்றும் டிராக்டரில் மணல் கடத்திச் செல்லப்படுவதை காவல்

    துறையினர் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ம.அரசூர் கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, செல்வமணி, நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர்கள் மோகன் (சிதம்பரம்), ரமேஷ்ராஜ் (அண்ணாமலைநகர்), உதயகுமார் (பரங்கிப்பேட்டை), வீரமணி (சேத்தியாத்தோப்பு), குமார் (குமராட்சி), உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், நாகராஜன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    மறியலால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai