Enable Javscript for better performance
பைக்-சரக்கு வாகனம் மோதல்: அரசு ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வடலூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் அரசு ஊழியர் உயிரிழந்தார்.

    குறிஞ்சிப்பாடி, கவரா தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (42). காட்டுமன்னார்குடியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றி வந்தார். இவர் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் வடலூருக்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார்.

    வடலூர், சேராக்குப்பம் அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த சிறிய வகை சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுந்தர்ராஜன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன் அளித்தப் புகாரின் பேரில் வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai