சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட கொள்கை விளக்கக் கூட்டம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி ஒன்றியச் செயலர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். நகர துணைச் செயலர்கள் டி.எஸ்.ஏ.ராமநாதன், பி.பாஸ்கர், பொருளர் ஆர்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்று மாவட்டச் செயலர் எம்.சேகர் ஆற்றிய சிறப்புரை: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழலை ஒழிப்போம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் வணிகர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்ட தேர்தல் துறையின் செயல்பாடு மந்தமாக உள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க அதற்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் உடனடி தகவல் இல்லை என்றார் அவர்.

     நிகழ்ச்சியில், மாவட்டக்குழு பி.ஜெகத்ரட்சகன், பண்ருட்டி நகரச் செயலர் எஸ்.டி.குணசேகரன், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ஜெ.திருமலை, ஒன்றிய துணைச் செயலர்கள் பண்ருட்டி கே.ஞானசேகர், அண்ணாகிராமம் ஜி.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரக்குழு டி.துரைராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai