சுடச்சுட

  

  மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

  சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை கடலூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை கடலூர் வெள்ளி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

   தொடர்ந்து வண்டிப்பாளையம் கடைவீதி, அண்ணா விளையாட்டரங்கம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் மாற்றம் வர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சி ஆட்சியில் அமர வேண்டுமென அவர்கள் விரும்புவதை அறிய முடிகிறது. அந்த மாற்றத்தை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தர முடியும் என்றார்.

   தொடர்ந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பிரசாரத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.கடல்தீபன், நிர்வாகிகள் அன்பு, தென்னரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai