Enable Javscript for better performance
ரூ.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி தேவை: வணிகர் சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி தேவை: வணிகர் சங்கம்

    By நெய்வேலி  |   Published on : 28th March 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வியாபாரிகள் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பேரமைப்பின் கடலூர் மண்டலத் தலைவர் டி.சண்முகம், பொதுச் செயலர் வி.வீரப்பன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து நடைபெறும் வாகனத் தணிக்கையால் வணிகர்கள் சிரமப்படுகின்றனர். வியாபாரிகள் அவரவரது முதலீட்டுக்கு ஏற்ப பணத்தை எடுத்துச் செல்வது வழக்கம்.

    ஆனால், அந்தப் பணத்துக்கு தேர்தல் அலுவலர்கள் கணக்குக் காட்டக் கூறுவதும், உரிய ஆவணங்களை காட்டினாலும் பணத்தை திரும்ப ஒப்படைக்காமல் அலைகழிக்கவும் செய்கின்றனர். அதனால் மன உளைச்சலை சந்திக்க நேரிடுகிறது.

     எனவே, பணம் எடுத்துச் செல்பவர் வியாபாரிதான் என்பதை உறுதி செய்தவுடன் காலதாமதம் இல்லாமல் பணத்தை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் வியாபாரிகள் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai