Enable Javscript for better performance
ரோட்டரி சங்க முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாசன நாள் விழா, பாராட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆளுநர் ஏ.மணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செல்வநாதன், சங்க உதவி ஆளுநர் எஸ்.ரமேஷ் கலந்துகொண்டனர். சங்கத் தலைவர் ஏ.பாண்டு முன்னிலை வகித்தனர்.

     விழாவில், காவல், தபால், தீயணைப்பு, கல்வித்துறை மற்றும் தனித்திறன் போட்டித்துறையில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரோட்டரி விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். சாசன உறுப்பினர் எம்.மதன்சந்த், தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி செயலர் சீனுவாசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai