விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டம்
By கடலூர் | Published on : 28th March 2016 05:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் நிதி திரட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலச் செயலர் சு.திருமாறன் தலைமையில் ஆலப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிதி வசூல் புத்தகங்களை கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் வழங்க, மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலர் ஏ.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவது.
தேர்தல் செலவுக்கான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்டி கட்சியின் தலைமையிடம் ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைச் செயலர் இல.திருமேனி, செய்தித் தொடர்பாளர் பால.புதியவன், கடலூர் ஒன்றியச் செயலர் வீ.சக்திவேல், தொகுதி துணைச் செயலர் வே.முரளி, நிர்வாகிகள் அருள்ஜோதி, ரகு, புலிக்கொடியன், த.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.