Enable Javscript for better performance
100% வாக்களிப்பு விளம்பரங்களில் மாற்றம் தேவை: குடியிருப்போர் சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    100% வாக்களிப்பு விளம்பரங்களில் மாற்றம் தேவை: குடியிருப்போர் சங்கம்

    By கடலூர்  |   Published on : 28th March 2016 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் மாற்றம் தேவையென கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இந்த கூட்டமைப்பினர் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் அண்மையில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சட்டப் பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக எங்களது கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும்.

     பறிமுதல் செய்யப்படும் பணத்துக்கு, நியாயமான காரணங்கள் காண்பிக்கப்பட்டால் கருவூலத்தில் செலுத்தாமல் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். விவசாயிகள் இடுபொருள்கள் வாங்கவோ, விளைபொருள்களை விற்பனை செய்தோ எடுத்துச் செல்லும் பணம் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக திரும்ப வழங்குதல். மாநிலம் முழுவதும் விவசாயக் கடன் வசூலிப்பதை தேர்தல் தேதி வரையில் நிறுத்தி வைத்தல் வேண்டும். 

     மக்களை வாக்களிக்க வைக்கும் விதமாக தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் பிரசாரத்தில் உள்ள விளம்பர தட்டிகளில் எதிர்மறையான கருத்துகளே உள்ளன. இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai