சுடச்சுட

  

  2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

  By கடலூர்  |   Published on : 28th March 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேலு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சலட்சுமி (20).

  இவர்களுக்கு திவ்யா (3), நித்யா (6 மாதம்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  குமரவேலுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். அதை பஞ்சலட்சுமி கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை குமரவேலு மதுபோதையில் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

  இதனால், விரக்தியடைந்த பஞ்சலட்சுமி விஷ விதையை அரைத்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, மயக்கமுற்ற 3 பேரையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  பின்னர், 3 பேரும் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai