சுடச்சுட

  

  நெல்லிக்குப்பம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  நெல்லிக்குப்பம் அடுத்துள்ள கே.என்.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி மலர்விழி (35). இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

  இதையடுத்து, இறுதிச் சடங்கு கீழ்அருங்குணம் கெடிலம் நதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்களிடம், கீழ்அருங்குணத்தைச் சேர்ந்த அன்புசக்தி, பலராமன், ஆதிகேசவன், சக்திவேல் ஆகியோர், ஏன் எங்கள் ஊரில் சடலத்தை புதைக்கின்றீர்கள் எனக் கேட்டனராம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

  சம்பவத்தில் கே.என்.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, மணிவண்ணன், கீழ்அருங்குணத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி இளங்கோவன், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ராமநாதன்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  சம்பம் குறித்து கே.என்.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, கீழ்அருங்குணத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் அளித்தப் புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai