Enable Javscript for better performance
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஏப்.1 முதல் நேர்காணல்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியம் பெறுவோருக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 2016-17ஆம் ஆண்டுக்கான நேர்காணல் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட சார் கருவூலங்களில் நடைபெறுகிறது.

    இதில், ஓய்வூதியர்கள் பங்கேற்று தனித் தாளில் தங்களது பெயர், ஓய்வூதிய கொடுவை எண், வங்கியின் பெயர், நிரந்தர முகவரி, நிரந்தர வருமானவரி அட்டை எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை குறிப்பிட்டு ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட பிரிவு கணக்கரிடம் தவறாது அளிக்க வேண்டும்.

    மேலும், நேர்காணலுக்கு வர இயலாதவர்கள், ஆயுள் சான்றிதழ் படிவத்தினை கருவூல இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மத்திய-மாநில அரசு அலுவலர்களில் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் சான்று பெற்று உரிய கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம்.

    குடும்ப ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை மேற்கண்ட விவரங்களுடன் கூடுதலாக மறுமணம் புரியா சான்று உரியவர்களிடம் பெற்று கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கருவூலத்தை 04142-231038 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், h‌t‌t‌p:​‌w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n‌k​a‌r‌u‌v‌o‌o‌l​a‌m​ என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடலாம். நேர்காணலுக்கு வராமலோ அல்லது ஆயுள் சான்று கொடுக்காமலோ இருப்பவர்களது ஓய்வூதியம் வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிறுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai