Enable Javscript for better performance
கடலூர் மாவட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு விருது- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு விருது

    By கடலூர்  |   Published on : 29th March 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு விருது கிடைத்துள்ளது.

    தமிழகத்தில் சிறப்பாக நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் சேவையாற்றியதற்காக 2012ஆம் ஆண்டுக்கான மாநில நுகர்வோர் பாதுகாப்பு விருதுக்கு கடலூர் மாவட்டம் தேர்வு பெற்றது.  இதனைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த 24ஆம் தேதி உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்றது.

     இதில், முதல் பரிசாக கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், 2013 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக இரண்டாம் பரிசையும் கடலூர் மாவட்டம் தட்டிச் சென்றது.

    விழாவில், அதற்கான கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.7,500 வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை சந்தித்தனர். அப்போது, ஊழியர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

     நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.தங்கவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai